திருவாரூரில் திமுகவுக்கு நெருக்கடி கொடுக்க தினகரன் திட்டம்

திருவாரூர் சட்டமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளர் அவ்வளவு எளிதில் வென்றுவிட முடியாது என்று கூறப்ப டுகிறது. திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி மறைவால் இடைத்தேர்தல் நடைபெறும் இத்தொகுதியின் திமுக வேட்பாளராக திருவாரூர் மாவட்டச் செயலாளர் பூண்டி கலைவாணன் நிறுத்தப்பட்டு உள்ளார். அவரை எதிர்த்து டிடிவி தினகரனின் அமமுக சார்பில் எஸ். காமராஜும் நாம் தமிழர் கட்சி சார்பில் சாகுல் ஹமீதும் களம் இறக்கப்பட்டுள்ளனர். அதிமுக வேட்பாளர் யார் என்று இன் னும் அறிவிக்கப்படவில்லை. இந்தத் தொகுதியில் இதுவரை ஒருமுறைகூட வெற்றி பெறாததாலும் இம்முறை கடும் போட்டி இருக்கும் என்பதாலும் அதிமுக அதிகமாக யோசித்து வருகிறதாம். இருப்பினும் மலர்விழி கலியபெருமாள் என்பவரைக் களமிறக்க அதிமுக முயன்று வருவதாகத் தெரிகிறது.

பாஜக, தேமுதிக, பாமக போன்ற முன்னணி அரசியல் கட்சிகள் இத் தேர்தலில் ஆர்வம் காட்டாத நிலையில் மக்கள் நீதி மய்யம் இங்கு போட்டியிடுவது குறித்து இரண்டொரு நாளில் முடிவு செய்யும் என்று அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். நான்கு அல்லது ஐந்துமுனைப் போட் டிக்குத் தயாராகி வரும் திருவாரூரில் திமுகவின் வெற்றியைப் பறிக்க அமமுக இறங்கி வேலை செய்யும் என்றும் ஆர்கே நகரைப்போல பணத்தைத் தண்ணீராக வாரி இறைக்க அக்கட்சித் தயாராகி வருவதாகவும் ஊடகச் செய்திகள் கூறு கின்றன.

அத்தொகுதியில் வெற்றிபெற 20 ரூபாய் 'டோக்கன்' கொடுத்ததாக தின கரன் மீது எழுந்த புகார் இன்றுவரை பேசப்படுகிறது. இந்நிலையில், தஞ்சையில் நேற்றுக் காலை தமது கட்சியின் தேர்தல் அலுவ லகத்தைத் திறந்து வைத்துப் பேசிய தின கரன், "திருவாரூர் இடைத்தேர்தலில் 303 வாக்குசாவடிகளிலும் தனி 'ஃபார்முலா' வைத்துள்ளேன்," என்றார்.

ஆனால், "எவ்வளவு பணம் கொடுத் தாலும் திருவாரூர் மக்கள் கலைஞர் மீது வைத்திருக்கும் பாசத்தை எவராலும் தட்டிப்பறித்துவிட முடியாது," என திமுக வேட்பாளர் கலைவாணன் கூறினார். தாம் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதும் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "அதி முக, அமமுக ஆகிய இரு கட்சிகளையும் நாங்கள் போட்டியாக நினைக்கவில்லை. ஏனெனில் இரு அணிகளும் ஒன்றாக இருந்தபோதுதான் கலைஞர் 68,366 வாக்குகள் அதிகமாகப் பெற்று வெற்றி யடைந்தார். அதேபோல நானும் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறு வேன். கலைஞருக்குக் காணிக்கையாக மக்கள் எங்களுக்கு வாக்களிப்பர்," என் றார். இந்நிலையில் இந்த இடைத்தேர்தலை நடத்த இயலுமா என ஆய்வு செய்து அறிக்கை அனுப்புமாறு திருவாரூர் மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு உத்தரவிட்டுள்ளார். கஜா புயலால் திருவாரூர் மாவட்டம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலை யில் தேர்தலைத் தள்ளிவைக்க வேண்டும் என வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டி.ராஜா இந்திய தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

அத்துடன் தேர்தலுக்குத் தடை கோரி டி. ராஜா உள்ளிட்ட மூவர் தாக்கல் செய் துள்ள மனுக்களை உச்ச நீதிமன்றம் நாளை விசாரிக்க உள்ளது. எனவே இடைத்தேர்தல் நடக்குமா என்னும் கேள்விக்கு நாளை பிற்பகலில் விடை தெரிந்துவிடும். இருந்தபோதிலும் திருவாரூர் தொகுதி யில் தேர்தல் பரபரப்பு சூடுபிடித்துள்ளது. வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பில் ஈடு படத் தொடங்கிவிட்டனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!