புதுடெல்லி: நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் ரஃபேல் விவகாரம் மீதான விவாதம் நடந்து கொண்டிருந்தபோது, ராகுல் காந்தி மீண்டும் கண்ணடித்துள்ளார். அதிமுக எம்பியும் துணை சபாநாயகருமான தம்பிதுரை பேசிக்கொண்டு இருந்தபோது அவருக்குப் பின் வரிசையில் அமர்ந்துகொண்டு மேஜையைத் தட்டி உற்சாகப்படுத்திய ராகுல் கண்ணடித்துச் சிரித்தார். பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவுத் தலைவர் அமித் மால்வியா தனது டுவிட்டர் பக்கத்தில் ராகுல் கண்ணடிக்கும் காணொளியைப் பதிவு செய்து தனது கருத்தைப் பதிவிட்டுள்ளார். அதில், "ரஃபேல் தொடர் பாக காரசாரமாக விவாதம் நடந்து கொண்டிருக்கும்போது கண்ணடித்துள்ளார். எனவே, அவருக்கு கண்டிப்பாக உதவி தேவை," எனக் பதிவிட்டுள்ளார். கடந்த ஜூலை மாதம் மத்திய அரசு மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் போதும் ராகுல் இதுபோன்று செய்தார்.
மீண்டும் கண்ணடித்த ராகுல் காந்தியை விமர்சித்த பாஜக
1 mins read
-

