தப்பியோடிய பொருளியல் குற்றவாளி மல்லையா

தப்பியோடிய பொருளியல் குற்றவாளி மல்லையா

1 mins read

புதுடெல்லி: வங்கிக் கடனைத் திருப்பி செலுத்தாமல் வெளிநாட் டிற்குச் சென்றுவிட்ட விஜய் மல் லையாவைத் தப்பியோடிய பொரு ளியல் குற்றவாளியாக சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது. இந்திய வங்கிகளில் வாங்கிய சுமார் 9 ஆயிரம் கோடி ரூபாய் கடனைத் திரும்பச் செலுத்தாமல் நாட்டை விட்டு வெளியேறிய தொழிலதிபர் விஜய் மல்லையா தற்போது லண்டனில் வசித்து வருகிறார். எனவே அவருக்கு எதிரான கடன் மோசடி வழக்கை சிபிஐயும் அமலாக்கத் துறையும் தீவிரப் படுத்தியது. இதற்கிடையே 'தப்பியோடிய பொருளியல் குற்றவாளிகள்' மசோதா சட்டமாக்கப்பட்டது. இப் புதிய சட்டத்தின் கீழ் அவர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. நேற்று இந்த வழக்கு விசா ரணைக்கு வந்தபோது விஜய் மல்லையாவைத் தப்பியோடிய பொருளியல் குற்றவாளியாக நீதிமன்றம் அறிவித்தது. இப்போது மல்லையா வாங்கிய கடனுக்கு ஈடாக அவரது சொத் துக்களை எளிதில் பறிமுதல் செய்ய முடியும். நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மேல் முறையீடு செய்ய விஜய் மல்லையா தரப்பில் கேட்கப்பட்ட கால அவகாசமும் நிராகரிக்கப்பட் டது. எனவே 'தப்பியோடிய பொருளி யல் குற்றவாளிகள்' எனும் புதிய சட்டத்தின் கீழ் நடவடிக்கையை எதிர்கொள்ளும் முதல் நபர் விஜய் மல்லையா ஆவார்.