கௌகாத்தி: மேகாலயாவில் சட்டவிரோத சுரங்கப் பணிகளைத் தடுக்கத் தவறிய அரசுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் 100 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது. மேகாலயாவின் ஜைன்டியா மாவட்டம் லும்தாரி கிராமத்தின் சட்ட விரோத நிலக்கரி சுரங்கத்தில் 15 பேர் கடந்த 24 நாட்களாக சிக்கியுள்ள நிலையில் இந்த தீர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் 13ஆம் தேதி, இந்த நிலக்கரி சுரங்கத்துக்குள் தொழிலாளர்கள் பணியில் இருந்த போது, அருகில் உள்ள லிட்டின் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக் கால், ஆற்று நீர் சுரங்கத்துக்குள் புகுந்தது. இதனால் சுமார் 15 தொழிலாளர்கள் நிலக்கரி சுரங்கத் துக்குள் மாட்டிக் கொண்டனர். 370 அடி ஆழத்தில் உள்ள அவர்களை மீட்க தேசிய பேரிடர் மீட்புப் படையினரும், மாநில பேரிடர் மீட்புப் படையினரும், காவல்துறையினரும் கடந்த 24 நாட்களாக மீட்கும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே, தொழிலாளர் களை மீட்பதற்கான பணிகளை விரைவுப்படுத்த உத்தரவிடக் கோரி ஆதித்யா என்.பிரசாத் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணையின் போது மத்திய அரசு சார்பில் முன்னிலையான தலைமை வழக் கறிஞர் துஷர் மேத்தா கூறுகையில், "தாய்லாந்து சுரங்கத்தில் நடை பெற்ற மீட்புப் பணிகளைவிட மேகாலயாவில் நடைபெற்று வரும் மீட்புப் பணிகள் மிகவும் கடின மானவை. "சுரங்கம் தொடர்பான வரை படம் எதுவும் இல்லை. அதனால் உள்ளே எத்தனை துளைகள் உள்ளன என்று கணிக்க முடிய வில்லை. இந்தத் துளையில் எந்த இடத்தில் தொழிலாளர்கள் சிக்கி யுள்ளனர் என்பதை கண்டுபிடிப்பது மிகவும் சிரமமாக உள்ளது," என்று தெரிவித்தார்.

