பள்ளிப் பேருந்து கவிழ்ந்ததில் ஆறு மாணவர்கள் பலி

பள்ளிப் பேருந்து கவிழ்ந்ததில் ஆறு மாணவர்கள் பலி

1 mins read

சிம்லா: இமாச்சலப் பிரதேசத்தில் 16 பேருடன் சென்ற பள்ளிப் பேருந்து பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில் ஓட்டுநரும் 6 குழந்தை களும் உயிரிழந்தனர். இமாச்சலப் பிரதேச மாநிலம், சிர்மார் மாவட்டம் சங்ரா நகரில், நேற்று காலையில் மாணவர்களை ஏற்றி வந்த டிஏவி பப்ளிக் பள்ளி பேருந்து மலைப்பாதையில் திடீ ரென கட்டுப்பாட்டை இழந்து தாறு மாறாக ஓடியது. பின்னர் மலையில் இருந்து உருண்டு ஆழமான பள்ளத்தாக் கில் விழுந்தது. இதில் பேருந்து கடுமையாக சேதமடைந்தது. பேருந்தினுள் இருந்த பள்ளிக் குழந்தைகள் பலத்த காயமடைந்து உயிருக்குப் போராடினர். தகவல் அறிந்த காவல்துறையினர் மற்றும் மீட்புக்குழுவினர் சம்பவ இடத் திற்குச் சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 10 வயதுக்குட்பட்ட 6 மாணவர்கள், ஓட்டுநர் என 7 பேர் பலியாகினர். மற்ற 10 பேர் பலத்த காயங் களுடன் மீட்கப்பட்டு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வரு கின்றனர். விபத்துக்கான காரணம் குறித்து போலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.