கேரள கட்சி பிரமுகர்களின் வீடு மீது வெடிகுண்டு வீச்சு

கேரள கட்சி பிரமுகர்களின் வீடு மீது வெடிகுண்டு வீச்சு

2 mins read

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப் பன் கோவிலில் இளம்பெண்கள் அனுமதிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவும் ஆதரவாக மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட் கட்சி யினரும் தொடர்ந்து போராட்டத் தில் ஈடுபட்டு வருவதால் கேரளா வின் பல இடங்களில் வன்முறை நீடிக் கிறது. இதனால் திருவனந்தபுரம், மலை­யின்கீழ் கண்ணூர், தலச்­சேரி, கோழிக்கோடு, ஆலப்புழா நகரங் களில் பதற்றம் நிலவுகிறது. இப்பகுதிகளில் ஆர்எஸ்எஸ், சங் பரிவார், பாஜகவினர் ஒரு அணியாகவும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்டு, இந்திய ஜனநாயக வாலி பர் சங்கம், இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் எதிரணியாகவும் பிரிந்து மோதலில் ஈடுபட்டு வருகி றார்கள்.

இதற்கிடையே, இரு அணி களைச் சேர்ந்த முக்கிய பிரமு கர்களின் வீடுகளில் நாட்டு வெடி குண்டுகள் வீசப்பட்டன. நேற்று முன்தினம் இரவு கண் யூர் மாவட்டம் தலச்சேரி தொகுதி யின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு எம்எல்ஏ ‌ஷம்சீர் வீடு மீது 10.30 மணியளவில் ஒரு கும்பல் வெடி குண்டுகளை வீசியது. இச்சம்பவத்திற்கு ஆர்எஸ்எஸ், சங்பரிவார் அமைப்புகளே கார ணம் என்று ‌ஷம்சீர் தெரிவித் தார். இந்தச் சம்பவம் நடந்த 2 மணி நேரத்தில் தலச்சேரியில் உள்ள பாஜகவின் மேல்சபை எம்பி முரளீ தரனின் மூதாதையர் வீட்டின் முன்பு வெடிகுண்டு வீசப்பட்டது. ‌ஷம்சீர் எம்எல்ஏ வீட்டின் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பதி லடியாகவே இந்தச் சம்பவம் நடந் ததாகக் கூறப்படுகிறது.

இதில் ஈடுபட்டவர்கள் கம்யூ னிஸ்டு கட்சியினர் என்று பாஜக குற்றம் சாட்டியது. அங்கு மேலும் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க காவல்துறை யினர் குவிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே பள்ளி ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த வெடி குண்டுகள், பயங்கர ஆயுதங்களை போலிசார் பறிமுதல் செய்தனர். இந்நிலையில், உச்சநீதிமன்ற அனுமதிக்கு பிறகு 10 இளம் பெண்கள் சபரிமலையில் தரிசனம் செய்திருக்கக்கூடும் என கேரள ஊடகம் தெரிவித்துள்ளது. சபரிமலை விவகாரம் தொடர் பான வழக்கு வருகிற 22ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசார ணைக்கு வர இருக்கிறது. அப்போது உச்சநீதிமன்ற உத்த ரவுப்படி சபரிமலையில் ஐயப்பனைத் தரிசித்த இளம்பெண்கள் குறித்த விவரங்களை காவல்துறையினர் அறிக்கையாக தாக்கல் செய்வார் கள் எனத் தெரிகிறது. கடந்த செவ்வாய்க்கிழமை இரு இளம்பெண்களும் வியாழக் கிழமை இரவு ஒருவரும் சபரிமலை கோயி லில் ஐயப்பனைத் தரிசனம் செய்த ததை மட்டுமே இதுவரை போலிசார் உறுதி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.