திருவாரூர் தேர்தல் ரத்தாகும் வாய்ப்பு தமிழ்நாட்டின் திருவாரூர் தொகுதி

திருவாரூர் தேர்தல் ரத்தாகும் வாய்ப்பு தமிழ்நாட்டின் திருவாரூர் தொகுதி

2 mins read

யில் இம்மாதம் 28ஆம் தேதி இடைத்தேர்தலை நடத்துவதா வேண்டாமா என்பது குறித்து இந்தியாவின் தேர்தல் ஆணையம் பரிசீலித்து வருவதாக ஊடகத் தகவல்கள் தெரிவித்தன. அநேகமாக அந்த இடைத்தேர் தல் ரத்து செய்யப்படலாம் என்றும் அதற்கான உத்தரவு இன்று வெளி வரக்கூடும் என்றும் நேற்று யூகத் தகவல்கள் பரபரப்பாக வலம் வந்தன. கஜா புயல் நிவாரணப் பணிகள் நடந்து வரும் நிலையில் அங்கு இப்போது தேர்தலை நடத்துவது சரிப்பட்டு வராது என்று அதிமுக, திமுக உள்ளிட்ட பல கட்சிகளும் கருதுகின்றன. நிவாரணப் பணிகளைக் காரணமாகக் காட்டி அந்தத் தேர் தலை இப்போது நடத்தக்கூடாது என்று கேட்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்த ஒரு மனுவை ஆராய்ந்த ஆணையம், அதன் தொடர்பில் விசாரணை நடத்தி அறிக்கையைத் தாக்கல் செய்யும் படி தமிழக தேர்தல் அதிகாரிக்கு உத்தரவு பிறப்பித்தது.

அதனையடுத்து அந்தத் தமி ழக தேர்தல் அதிகாரி பிறப்பித்த வேறு ஓர் உத்தரவுக்கு இணங்க திருவாரூர் மாவட்ட ஆட்சியர் பல அரசியல் கட்சிகளையும் கூட்டி அவற்றின் கருத்துகளைக் கேட்ட றிந்தார். அதிமுக, திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட பல கட்சிகளும் இப் போது திருவாரூர் இடைத்தேர்தல் தேவை இல்லை என்று ஆட்சிய ரிடம் தெரிவித்தன. தமிழகத்தில் காலியாக இருக் கும் 20 தொகுதிகளில் ஒரு தொகுதிக்கு மட்டும் இப்போது இடைத்தேர்தல் நடத்தவேண்டிய அவசியம் என்ன என்றும் சில கட்சிகள் கேள்வி எழுப்பின. அடுத்த ஆண்டு நடக்கவிருக் கும் நாடாளுமன்றத் தேர்தலுடன் சேர்த்து திருவாரூர் இடைத்தேர் தலை வைத்துக்கொள்லாம் என்று அதிமுக தரப்பு யோசனை கூறி யது. பல கட்சிகளின் கருத்து களையும் கேட்ட ஆட்சியர், தனது அறிக்கையைத் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் தாக்கல் செய்தார்.

அந்த அறிக்கை தேர்தல் ஆணையத்தைச் சென்றடைந்தது. திருவாரூர் இடைத்தேர்தல் இம்மாதம் 28ஆம் தேதி நடக்கும் என்று ஏற்கெனவே அறிவிக்கப் பட்டு உள்ளது. வேட்புமனுத் தாக் கல் ஜனவரி 3ஆம் தேதி தொடங்கி விட்டது. இதனிடையே, திருவாரூர் இடைத்தேர்தலை ஒட்டி வேட் பாளர்களை ஏற்கெனவே அறி வித்து இருக்கும் திமுக, அமமுக, நாம் தமிழர் கட்சி ஆகியவை அத்தொகுதியில் நேற்று பிரசாரத் தைத் தொடங்க இருந்தன. திருவாரூரில் தேர்தலைச் சந்திக்க ஆளும் கட்சியும் திமுக வும் அஞ்சுகின்றன என்று எடுத்த எடுப்பிலேயே அமமுக -துணை பொதுச் செயலாளர் டிடிவி தின கரன் காரசாரமாகத் தெரிவித்தார். இதற்குப் பதிலடி கொடுத்த திமுக தலைவர் ஸ்டாலின், ஆர்கே நகரில் தினகரனை '20 ரூ. தின கரன்' என்று அழைக்கிறார்கள் என கடுமையாகச் சாடினார். திமுகவுக்குப் பயமே கிடையாது என்றாரவர்.