சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசரும், நடிகர் ரஜினியும் அமெரிக்காவில் சந்தித்துப் பேசியதாக தமிழக ஊடகம் பரபரப்புச் செய்தி வெளி யிட்டுள்ளது. இந்தச் சந்திப்பின் மூலம் தமிழக அரசியல் களத்தில் சில மாற்றங்கள் ஏற்பட வாய்ப் புள்ளதாக அரசியல் நோக்கர்கள் சிலர் கருதுகின்றனர். நடிகர் ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் செய்யப்போவதாக அறி வித்து ஓராண்டு ஆகிவிட்ட போதிலும், இன்னும் அவர் கட்சி தொடங்கவில்லை. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு அமெ ரிக்காவுக்கு புறப்பட்டுச் சென்றார் ரஜினி.
அவரைப் போலவே தனிப்பட்ட காரணங்களுக்காக திருநாவுக்கர சரும், தேமுதிக தலைவர் விஜயகாந்தும் அமெரிக்கா சென்றுள்ளனர். உடல்நல பாதிப் பால் சிறப்பு சிகிச்சை பெற்றுவரும் விஜயகாந்த் அமெரிக்காவில் அர சியல் ரீதியிலான காரணங்க ளுக்காக யாரையும் சந்திக்க மாட்டார் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் நியூயார்க்கில் இருந்த ரஜினியை, அண்மையில் சந்தித்துப் பேசியுள்ளார் திருநா வுக்கரசர். இருவரும் அரசியல் கள நிலவரங்கள் குறித்து விவா தித்ததாகக் கூறப்படுகிறது.
தமிழக காங்கிரஸ் தலைவரை மாற்ற வேண்டும் என அக்கட்சி நிர்வாகிகள் சிலர் குரல் எழுப்பி வருகின்றனர். இதன் எதிரொலி யாக திருநாவுக்கரசர் அப்பதவி யில் இருந்து நீக்கப்படலாம் என தகவல் வெளியானது. இந்நிலையில் தமிழக காங்கி ரஸ் மேலிடப் பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக்கை சந்தித்த திரு நாவுக்கரசர், நாடாளுமன்றத் தேர் தல் வரை தம்மை மாற்ற வேண்டாம் என கோரிக்கை விடுத்ததாகத் தெரிகிறது. மேலும் தம்மை மாநிலத் தலைவர் பொறுப்பில் இருந்து நீக்கும் பட்சத்தில் காங்கிரசை விட்டு ரஜினிகாந்த் துவங்க உள்ள புதுக் கட்சியில் சேர வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் அமெரிக்காவில் ரஜினியை சந்தித்துப் பேசியுள்ளார் திருநாவுக்கரசர். அச்சமயம் ரஜினியுடன் இணைந்து செயல்பட அவர் விருப்பம் தெரிவித்ததாகவும், அதற்கு காலமும் சூழ்நிலையும் கூடி வந்தால் இது சாத்தியமாகும் என ரஜினி தெரிவித்ததாகவும் தமிழக ஊடகச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
திருநாவுக்கரசரின் இந்த அதிரடி செயல்பாடு காங்கிரஸ் தலைமைக்கு அதிர்ச்சி அளித் துள்ளது. ஜனவரி 9ஆம் தேதி டெல்லியில் காங்கிரஸ் மாநிலத் தலைவர்கள் மாநாடு நடைபெற உள்ளது. அப்போது தமிழக காங்கிரஸ் தலைவராக திருநாவுக் கரசர் நீடிப்பாரா? அல்லது நீக்கப்படுவாரா? என்பது குறித்து ராகுல் காந்தி முடிவெடுப்பார் எனத் தெரிகிறது. ரஜினிக்குச் சொந்தமான ராக வேந்திரா திருமண மண்டபம் தொடர்பாக ஒரு சிக்கல் முளைத்த போது அப்போது வீட்டு வசதித் துறை அமைச்சராக இருந்த திரு நாவுக்கரசர் அவருக்கு உதவி கரமாக இருந்து சிக்கலைத் தீர்த்துவைத்தார். அப்போது முதல் ரஜினியும் திருநாவுக்கரசரும் அரசியலுக்கு அப்பாற்பட்டு நட்பு பாராட்டி வருகின்றனர்.

