வேன்=லாரி மோதல்: ஐயப்ப பக்தர்கள் 10 பேர் மரணம்

வேன்=லாரி மோதல்: ஐயப்ப பக்தர்கள் 10 பேர் மரணம்

1 mins read

புதுக்கோட்டை: லாரி, வேன் மோதிக்கொண்ட கோர விபத் தில் ஐயப்ப பக்தர்கள் பத்து பேர் உயிரிழந்த சம்பவம் புதுக் கோட்டை வட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த விபத்தில் ஐந்து பேர் படுகாயம் அடைந்தனர். ஆந்திராவைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் 15 பேர் சபரிமலைக்குச் சென்றுவிட்டு வேன் ஒன்றில் ஊர் திரும்பிக்கொண்டிருந்தனர். நேற்று முன்தினம் புதுக்கோட்டை வழி திருச்சி நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது எதிர் திசையில் பயங்கர வேகத்தில் வந்த கொள்கலன் லாரி ஒன்று இந்த வேன் மீது மோதியது. இதில் பக்தர்கள் சென்ற வேனின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கிப்போனது. இதில் ஏழு பேர் சம்பவ இடத் திலேயே உடல் நசுங்கி உயிரி ழந்தனர். படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்ட 8 பேரில் மூவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இத னால் பலி எண்ணிக்கை பத்தாக உயர்ந்தது. லாரி ஓட்டுநர் தப்பி ஓடிவிட்ட தாகவும் அவரைத் தேடி வருவதா கவும் போலிசார் தெரிவித்துள்ள னர். படுகாயங்களுடன் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வரும் ஐந்து பக்தர்களை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.