முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் பாஜக தலைவர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை திடீர் சந்திப்பு

முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் பாஜக தலைவர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை திடீர் சந்திப்பு

1 mins read

சென்னை: மத்திய இணைய மைச்சர் பொன். ராதாகிருஷ் ணன் திடீரென முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்துப் பேசியது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இச்சந்திப்பின்போது அதி முக, பாஜக இடையே கூட்டணி அமைப்பது குறித்து ஆலோ சிக்கப்பட்டதாக தகவல் வெளி யான நிலையில், கூட்டணி குறித்து ஏதும் விவாதிக்க வில்லை என பொன்.ராதா கிருஷ்ணன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். "நாகர்கோவில் நகராட்சியை, மாநகராட்சியாக தரம் உயர்த்து வது குறித்து முதல்வருடன் ஆலோசித்தேன்.

இந்தச் சந்திப்பின்போது கூட்டணி குறித்தோ, அரசியல் குறித்தோ ஆலோசிக்கவில்லை," என்று செய்தியாளர்களிடம் தெரிவித் தார் பொன். ராதாகிருஷ்ணன். இதற்கிடையே தமிழக பாஜக தலைவி தமிழிசை சௌந்தரராஜ னும் முதல்வர் பழனிசாமியை நேற்று முன்தினம் இரவு திடீரென சந்தித்தார். இருவரும் பிரதமர் மோடி யின் தமிழக வருகை குறித்துப் பேசியதாகக் கூறப்படுகிறது. இந்தச் சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "திருவாரூர் இடைத்தேர்தல் நடக்கலாம் அல்லது நடக்காமலும் போக லாம்," என்றார். திருவாரூர் சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பாஜகவின் இரு முக்கிய பிரமுகர்கள் திடீரென முதல்வர் பழனிசாமியை சந்தித்துப் பேசியிருப்பது அரசியல் முக் கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.