வீண் குழப்பங்களை தவிர்க்க அடக்கி வாசித்த மு.க.ஸ்டாலின்

வீண் குழப்பங்களை தவிர்க்க அடக்கி வாசித்த மு.க.ஸ்டாலின்

1 mins read

சென்னை: வீண் குழப்பங்களைத் தவிர்க்கும் விதமாகவே திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலில் தனது மகன் உதயநிதியை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் களம் இறக்கவில்லை எனக் கூறப்படுகிறது. உதயநிதிக்கு வாய்ப்பு தர வேண்டும் என சில நிர்வாகிகள் வலியுறுத்திய நிலையில், அவருக்கு வாய்ப்பு தரக் கூடாது என்று சிலர் எதிர்ப்பு தெரிவித்ததாக திமுக வட்டாரங்கள் கூறுகின்றன. இதற்கிடையே கருணாநிதியின் மகள் செல்வியை களமிறக்குவது குறித்தும் திமுக தலைமை பரிசீலித்ததாகவும் தெரிகிறது. காலஞ் சென்ற திமுக தலைவர் கருணாநிதி திருவாரூர் தொகுதி எம்எல்ஏவாக இருந்தபோது அங்கு அடிக்கடி சென்று தொகுதி மக்களுக்கான பல்வேறு பணிகளை செல்வி முன்னின்று செய் ததாக கூறப்படுகிறது.

எனவே அவர் இடைத்தேர்தலில் களமிறக்கப்பட்டால் தொகுதி மக்க ளின் ஆதரவை சுலபத்தில் பெற்று விடலாம் என திமுக நிர்வாகிகள் சிலர் மு.க.ஸ்டாலினிடம் கூறியதாக தமிழக ஊடகம் செய்தி வெளியிட்டுள் ளது. இந்நிலையில் குடும்ப அரசியல் எனும் எதிர்ப்பு மீண்டும் கிளம்பலாம் என்பதால் குடும்பத்தாரை களமிறக்கா மல் ஸ்டாலின் அடக்கி வாசித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுத்த சட்டப்பேரவை தேர்தலின் போது செல்வி, உதயநிதி ஸ்டாலின் ஆகிய இருவரில் யாரேனும் ஒருவர் தேர்தல் களம் காணப்போவது உறுதி என்கிறார்கள் விவரம் அறிந்த திமுக நிர்வாகிகள்.