தீய சக்திகளின் பிரதிநிதி: முதல்வரை தாக்கிய எச்.ராஜா

தீய சக்திகளின் பிரதிநிதி: முதல்வரை தாக்கிய எச்.ராஜா

1 mins read

திருச்சி: கேரள முதல்வர் பினராயி விஜயனை தீய சக்திகளின் பிரதிநிதி என பாஜக தேசிய செயலர் எச்.ராஜா காட்டத்துடன் விமர்சித்துள்ளார். மோசடியாகச் செயல்பட்டு சபரிமலையின் புனிதத்தை கேரள முதல்வர் கெடுத்துவிட்டதாகவும் திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் குற்றம் சாட்டி னார். "நாத்திக கயவர்கள், தீய சக்திகள், ஐயப்பன் கோவிலை சொகுசு தங்குவிடுதி போல் மாற்ற முயற்சிக்கின்றன. ஏற்கெனவே வழிபாட்டுத் தலங்கள் சம்பந்தப் பட்ட பல்வேறு விஷயங்களில் கேரள முதல்வர் உச்ச நீதிமன்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்த வில்லை," என்றார் எச்.ராஜா. மதமாற்றம் செய்யும் தீய சக்தி களுடன் இணைந்து, கேரளாவை வன்முறைக்காடாக பினராயி விஜயன் மாற்றியிருப்பதாக குற்றம் சாட்டிய அவர், முதல்வரின் இத் தகைய போக்கு மிகவும் கண் டிக்கத்தக்கது என்றார். "மதம் மாற்றும் சக்திகளிடம் சபரிமலையை ஒப்படைக்கும் நோக்கத்தில் கேரள முதல்வர் செயல்படுவதை பாரதிய ஜனதா வன்மையாகக் கண்டிக்கிறது," என்றார் எச்.ராஜா. தமிழகத்தில் அறநிலையத்துறை அதிகாரிகள் அலட்சியப் போக்கு டன் செயல்படுவதாக குற்றம்சாட் டிய அவர், மாநிலம் முழுவதும் பல கோவில்களில் தொடர்ந்து முறைகேடுகள் நடந்து வருவதாகச் சாடினார்.