சென்னை: தமிழகத்தில் தொழில் துவங்க வரும் நிறுவனங்கள், தமிழக இளையர்களுக்கு ஐம்பது விழுக்காடு வேலை வாய்ப்பு களை வழங்க வேண்டும் என அமைச்சர் எம்.சி. சம்பத் தெரிவித்துள்ளார். இது குறித்து அத்தகைய நிறுவனங்களிடம் வலியுறுத் தப்பட்டு இருப்பதாகவும் பேர வையில் அவர் குறிப்பிட்டார். முன்னதாக, தமிழகத்தில் நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டின் வழி தமிழக இளையர்களுக்கான வேலை வாய்ப்புகளை அதிகப்படுத்த வேண்டும் என திமுக உறுப்பினர் மதிவாணன் கேட்டுக்கொண்டார்.
தமிழக இளையர்களுக்கு வேலை வாய்ப்பு
1 mins read

