விபத்து எண்ணிக்கை அதிகரிப்பு: 150 உயிர்களைப் பறித்த சாலை

விபத்து எண்ணிக்கை அதிகரிப்பு: 150 உயிர்களைப் பறித்த சாலை

2 mins read

ஓசூர்: தமிழகத்தையும், கர்நாட காவையும் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலையில் செல்பவர்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என போக்குவரத்துத் துறை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். அந்த நெடுஞ்சாலை யில் நிகழும் விபத்துகளின் எண் ணிக்கை அதிகரித்து வருவதே இதற்குக் காரணம். தமிழகத்தின் ஓசூர் பகுதி வழியாக பெங்களூரு நோக்கிச் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் கடந்தாண்டில் மட்டும் பல்வேறு விபத்துகளில் 150 பேர் பலியாகி உள்ளனர். தமிழகத்தில் உள்ள, முக்கிய சாலைகளில் ஓசூர் - கிருஷ்ண கிரி வழியே பெங்களூரு வரை நீடிக்கும் 6 வழி தேசிய நெடுஞ் சாலையும் ஒன்று. தினந்தோறும் சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற் பட்ட வாகனங்கள் இந்தச் சாலையைப் பயன்படுத்துகின்றன.

இந்நிலையில் நெடுஞ்சாலைக் குரிய தரம் இல்லாத காரணத்தால், இந்தச் சாலையில் பல விபத் துக்கள் நிகழ்கின்றன. குறிப்பாக மேலுமலை முதல் ஜுஜுவாடி வரையிலான பகுதியில்தான் தொடர்ந்து விபத்துக்கள் நிகழ்வதாகக் கூறப்படுகிறது. "மற்ற தேசிய நெடுஞ்சாலைகள் போல் தரமாக இல்லாமல், மேடு பள்ளம் நிறைந்துள்ளதுடன், சாலைகளில் நிறுத்தப்படும் வாகனங்கள், 'யூடர்ன்' போன் றவற்றால், அதிகளவில் விபத்துக் கள் அரங்கேறியுள்ளன. "கடந்த ஆண்டு இந்தச் சாலையில் நிகழ்ந்த 379க்கும் மேற்பட்ட விபத்துகளில் 262க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ள னர்; 150 பேர் பலியாகியுள்ளனர். அதிகபட்சமாக, சூளகிரி அடுத்த மேலுமலையில் இருந்து, கோப சந்திரம் வரை அதிகளவில் விபத்துகள் நடந்துள்ளன," என சமூக ஆர்வலர்கள் புள்ளி விவ ரங்களைத் தெரிவித்து, கவ லையை வெளிப்படுத்துகின்றனர். எனவே விபத்துப் பகுதிகளில் சாலை கட்டமைப்புகளை மாற்றி, தேவையான இடத்தில் பாலம் அமைக்க வேண்டும் எனவும் வாகனமோட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.