கோவை: நாற்பது ஆண்டுகளுக்கு முன் தத்து கொடுக்கப்பட்ட இளையர், தன் பெற்றோரை தேடி அலைவது கோவை மக்களை நெகிழ வைத்துள்ளது. தொண்டாமுத்தூரைச் சேர்ந்த ராஜ்குமார் என்ற அந்த ஆடவர் பிறந்த சில தினங்களில் அவர் பெற்றோரின் கருத்து வேறுபாட்டால் பிரிந்துவிட்டனர். அவரது தந்தைக்கு பக்கவாதம் ஏற்பட்ட நிலையில், காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டிருந்த ராஜ்குமாரை, டென்மார்க்கைச் சேர்ந்த தம்பதியர் தத்தெடுத்தனர். இதையடுத்து டென்மார்க் சென்ற ராஜ்குமாருக்கு தனது உண்மையான பெற்றோர் குறித்த விவரங்கள் அண்மையில்தான் தெரிய வந்தது. பெற்றோரை தேடிக் கண்டுபிடிக்க தமிழகம் வந்துள்ள அவர், தனது சொந்த ஊரில் விவரங்கள் சேகரித்து வருகிறார். தனது பெற்றோர் குறித்து ஏதேனும் விவரம் தெரிந்தால் அதை தெரிவித்து உதவுமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
40 ஆண்டுகளுக்குப் பிறகு நாடு திரும்பி பெற்றோரை தேடும் இளையர்
1 mins read

