நெருங்கும் பொங்கல் பண்டிகை: கரும்பு வெட்டும் பணி தீவிரம்

நெருங்கும் பொங்கல் பண்டிகை: கரும்பு வெட்டும் பணி தீவிரம்

1 mins read

ஈரோடு: பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில், மாநிலம் முழுவதும் கரும்பு வெட்டும் பணி தீவிரம் அடைந்துள்ளது. தமிழகத்தில் இருந்து குஜராத், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களுக்கு கரும்பு அனுப்பி வைக்கப்படுகிறது. ஈரோடு உள்ளிட்ட சில பகுதிகளில் இருந்து மாநிலத்தின் மற்ற பகுதிகளுக்கும் அண்டை மாநிலங்களுக்கும் அடுத்த இரு தினங்களில் கரும்பு அனுப்பி வைக்கப்படும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் 400 கரும்புகள் தற்போது ஏழாயிரம் ரூபாய்க்கு விற்கப்படுவதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். கஜா புயலால் ஏற்பட்ட கடும் சேதங்கள் காரணமாக டெல்டா பகுதி விவசாயிகள் பொங்கலை கொண்டாடுவது சந்தேகம்தான்.