முதல்வர்: உரிமையைக் காப்போம்

முதல்வர்: உரிமையைக் காப்போம்

1 mins read

சென்னை: அணை பாதுகாப்பு சட்ட மசோதாவை திரும்பப்பெற்று தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட அரசு தகுந்த நடவடிக்கை எடுத்து வருவதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழகத்தின் உரிமைகளில் மத்திய அரசு தலையிடுவது அரசி யல் சாசன அமைப்புக்கும் கூட்டாட்சித் தத்துவத்துக்கும் எதிரா னது என்றும் சட்டப்பேரவையில் பேசியபோது அவர் குறிப்பிட் டார். அணை பாதுகாப்பு சட்ட மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றக் கூடாது எனவும் அவர் மேலும் வலியுறுத்தினார்.