ராகுல்: பொய் பேசிய ராணுவ அமைச்சர் பதவி விலகவேண்டும்

ராகுல்: பொய் பேசிய ராணுவ அமைச்சர் பதவி விலகவேண்டும்

2 mins read

புதுடெல்லி: நாடாளுமன்றத்தில் ராணுவ அமைச்சர் நிர்மலா சீதா ராமன் கொஞ்சமும் கூச்சமின்றி பொய் பேசியுள்ளதால் அவர் பதவி விலகவேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தி கூறியுள்ளார்.

ராகுலின் குற்றச்சாட்டுக்கு கண்டனம் தெரிவித்துள்ள நிர்மலா சீதாராமன், "நான் கூறிய தகவல் கள் அனைத்தும் உண்மைதான்," என்று கூறி அதற்கான ஆதாரங் களையும் வெளியிட்டுள்ளார். ராகுல் காந்திக்கு "ஏபிசி முதல் பாடம் கற்கவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது போலத் தெரிகிறது. ஆவணங்களில் என்ன இருக் கிறது என்றுகூட முழுமையாகப் படித்துப் புரிந்துகொள்ளாமல், அதை சுட்டிக்காட்டி மக்களுக்குப் பொய்யான தகவல்களை பொறுப் பற்ற முறையில் ராகுல் அளிப்பது வெட்கப்பட வேண்டிய விஷயம்.

"காங்கிரஸ் தலைவராக இருந்துகொண்டு பொய்த் தகவல் களை பரப்பி, மக்களைத் தவறாக வழிநடத்துவது பெருத்த அவ மானம். இதற்காக நாடாளுமன்றத் தில் நாட்டுமக்களிடம் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்கத் தயாரா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் நடந்த விவா தத்தின்போது பேசிய நிர்மலா சீதாராமன், எச்ஏஎல் நிறுவனத் துக்கு அரசு ரூ.1 லட்சம் கோடிக்கு ஒப்பந்தங்கள் கொடுத்திருப்பதாகத் தெரிவித்தார்.

ஆனால், எச்ஏஎல் நிறுவனத் துக்கு ஒரு ரூபாய்க்குக் கூட ஒப் பந்தங்கள் வரவில்லை என்று ஊட கங்களில் செய்தி வெளியானது. இதுகுறித்து டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ள ராகுல் காந்தி, "ரஃபேல் விமான விவகாரத்தில் நிர்மலா சீதாராமன் நாடாளுமன் றத்தில் பொய் கூறியுள்ளார்.

"இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் என்ற ஹெச்ஏஎல் நிறுவனத்துக்கு ரூ.1 லட்சம் கோடிக்கு ஒப்பந்தங்கள் வழங்கியதற்கான ஆவணங்களை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யவேண்டும். இல்லாவிட்டால் ராணுவ அமைச்சர் பதவி விலக வேண்டும்," என்று தெரிவித்தார். அதற்கு பதிலளித்த நிர்மலா சீதா ராமன், "2014ஆம் ஆண்டுக் கும் 2018ஆம் ஆண்டுக்கும் இடையே ஹெச்ஏஎல் நிறுவனத் துக்கும் அரசுக்கும் இடையே 26,570 கோடி ரூபாய்க்கு ஒப்பந் தங்கள் கையெழுத்தாகி உள்ளன.