திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் ரத்து

இம்மாதம் 28ஆம் தேதி நடக்க இருந்த திருவாரூர் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் ரத்து செய்யப்படுவதாக இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் நேற்று திடீரென அறிவித்தது. கஜா புயல் நிவாரணப் பணி களை மேற்கொள்ள இன்னும் கால அவகாசம் தேவைப்படுவதால் இந்தச் சூழலில் அங்கு இடைத் தேர்தலை நடத்துவது பொருத்த மாக இராது எனத் தலைமைத் தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.

முன்னாள் திமுக தலைவர் கருணாநிதியின் மறைவால் காலியான திருவாரூர் உட்பட தமிழகத்தில் மொத்தம் 20 தொகுதிகள் காலியாக உள்ளன. ஆனால், தேர்தல் ஆணையம் திருவாரூர் தொகுதிக்கு மட்டும் இடைத்தேர்தலை அறிவித்தது. இதையடுத்து, திமுக, நாம் தமிழர், அமமுக ஆகிய கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்தன.

"திருவாரூரில் மட்டும் இடைத் தேர்தலை நடத்துவதில் ஏதேனும் உள்நோக்கம் இருக்கலாம். தேர் தலில் வெல்வதைவிட புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்காமல் போய்விடக்கூடாது என்பதே எங்களின் நிலைப்பாடு. காலியாக உள்ள 20 தொகுதிகளுக்கும் ஒரே நாளில் இடைத்தேர்தலை நடத்த வேண்டும் எனத் தேர்தல் ஆணையத்தைக் கேட்டுக்கொள் கிறேன்," என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். மாறாக, தோல்வி பயத்தில் இடைத்தேர்தலைத் திட்டமிட்டு நிறுத்திவிட்டதாகக் கூறினார் அமமுக கொள்கைப் பரப்புச் செய லாளர் தங்கத் தமிழ்ச்செல்வன்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!