சென்னை: இட ஒதுக்கீடு என்பது வெறும் பொருளாதார அடிப்படையில் வழங்கப்படுவதல்ல என்று சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரி வித்துள்ளார். பல நூறு ஆண்டுகளாக நிலவி வரும் சமூகப் பாகுபாடுகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சமத் துவ நோக்கில் வழங்கப்படுவதே இட ஒதுக்கீடு என்று அறிக்கை ஒன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு என முற்பட்ட வகுப்பினருக்கு உதவு வது போல் பாஜக அரசு கொண்டு வந்திருக்கும் சட்டத்திருத்தமானது உண்மையில் அவர்களை ஏமாற் றும் நோக்கம் கொண்டது என்று திருமாவளவன் சாடியுள்ளார். உச்ச நீதிமன்றத்தின் அரசியல மைப்புச் சட்ட அமர்வுகளில் வழங்கப்பட்ட தீர்ப்புகளுக்கு எதி ராக புதிய இட ஒதுக்கீட்டை மத்திய அரசு அறிவித்துள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர், பாஜக அரசு நீதித்துறையை மதிக்காதது மட்டுமின்றி இடஒதுக்கீட்டுக்கு எதிரானது என்பதற்கும் இது ஒரு சான்று எனத் தெரிவித்துள்ளார்.
பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே தாழ்த்தப்பட்டவர்களுக் கான இடஒதுக்கீட்டைக் கொஞ்சம் கொஞ்சமாக சிதைத்து வருகிறது என்றும் இட ஒதுக்கீட்டை ரத்து செய்கிறோம் என வெளிப்படை யாகக் கூறாமலேயே அதை மத்திய அரசு முடக்கிக் கொண்டிருக்கிறது என்றும் திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார். "இட ஒதுக்கீட்டுக்குப் பொரு ளாதார அளவுகோலை வைப்பதன் மூலம் அதன் அடிப்படையையே தகர்க்க நினைக்கிறது மத்திய அரசு. "தோல்விப் பயம் காரணமாக பாஜக மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கைக்கு எவரும் ஏமாற மாட்டார்கள்," என்றும் தொல். திருமாவளவன் அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.

