17 காளைகளை வளர்க்கும் வீரபாண்டி: அன்றாட தீவனத்துக்கு ரூ.4,350 செலவிடுகிறார்

17 காளைகளை வளர்க்கும் வீரபாண்டி: அன்றாட தீவனத்துக்கு ரூ.4,350 செலவிடுகிறார்

2 mins read

மதுரை: ஜல்லிக்கட்டு போட்டிக ளில் பங்கேற்கும் நோக்கத்துடன் 17 காளைகளை வளர்த்து வருகி றார் மதுரையைச் சேர்ந்த வீரபாண்டி. தொடக்கக் காலத்தில் லாரி ஓட்டுநராகப் பணியாற்றி வந்த இவர், தற்போது 13 லாரிகளுக்கு உரிமையாளர். சில மாதங்களுக்கு முன்பு வரை 27 காளை மாடுகளை வளர்த்து வந்துள்ளார். அவற்றுள் 10 காளைகளை அண்மையில் விற்றுவிட்டார். தனது பாட்டனார் காலத்தில் இருந்தே தமது குடும் பத்தார் ஜல்லிக்கட்டு காளைகளை வளர்த்து வருவதாகவும், காளை களைப் பராமரிப்பது, வாடி வாச லுக்கு அழைத்துச் செல்வது என சிறு வயது முதலே காளைகளுடன் தாம் அதிகம் பழகியதாகவும் கூறுகிறார் வீரபாண்டி. ஓட்டுநர்கள் கிடைக்காததால் இவரது லாரிகளில் சரிபாதி ஓடு வதில்லை. எனினும் கிடைக்கும் வருவாயைக் கொண்டு குடும் பத்தைப் பராமரிப்பதுடன், காளைக ளுக்கும் கணிசமான தொகையை செலவிட்டு வருகிறார்.

"லாரிகளை நிறுத்தி வைக்க வாங்கிய காலி மனையில்தான் தற்போது கொட்டகை அமைத்து காளைகளைப் பராமரித்து வருகி றேன். வாரத்தில் ஓரிரு நாட்கள் தான் வீட்டுக்குச் செல்வேன். "கடந்த ஆண்டு ஜல்லிக்கட்டில் எனது காளைகளை ஒருவர் கூட அடக்கவில்லை. இதனால் 4 தங்கக் காசுகள், 2 பீரோக்கள், 3 மிதிவண்டிகள், அண்டா, குத்து விளக்கு பரிசுகளை என் காளை கள் பெற்றன. ஒரு காளைக்கு தீவனத்துக்கு மட்டும் தினமும் ரூ.250 செலவாகிறது. 17 காளைகளுக்கு நாள்தோறும் ரூ.4,250 செலவிடுகிறேன். மக்காச் சோளம், இரும்புச் சோளம், கோதுமை, நவதானியங்களை வாங்கி கலந்து கொடுக்கிறேன்," என்கிறார் வீரபாண்டி. மொத்தமாக 17 ஜல்லிக்கட்டுக் காளைகளை இவர் பராமரிப்பதை கண்டு வியந்துபோன உள்ளூர் கால்நடை மருத்துவர் ஒருவர், அவற்றுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்கிறார்.