சென்னை: சட்டப்பேரவையில் ஆளுநர் ஆற்றிய உரை ஒரு விடுகதையைப் போல் அமைந்தி ருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் பேரவையில் பேசிய அவர், தமிழக அரசு தொழில் துறை, வருவாய்த் துறை, சுகாதாரத் துறை, உள்ளாட்சித் துறை உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் தோல்வி அடைந்து விட்டதாகச் சாடினார். "மூடி இருக்கும் கையில் என்ன இருக்கும்? என்று பிரித்துப் பார்த்தால் வெறுங்கைதான் இருக்கும் என்பதுபோல் ஆளுந ரின் உரை உள்ளது. பூஜ்ஜியத்தில் இந்த ராஜ்ஜியம் நடக்கிறது என்ற சிறிய செய்தியை சொல்வதற் காகத்தான் ஆளுநரின் 52 பக்க உரை இருக்கிறது. "தமிழக மக்கள் இன்றைக்கு போராட்ட வழிமுறையில் போய்க் கொண்டிருக்கிறார்கள் என்பதை மக்கள் எச்சரிக்கையாகக் கொள்ள வேண்டும். மொத்தத்தில் இது ஆளுநர் உரை அல்ல, கறை," என்றார் மு.க.ஸ்டாலின். மரங்களைப் பாதுகாக்க, பருவ மழை மாற்றத்தை கணிக்க தனித் துறை ஒன்றை அமைக்க வேண் டும் என்று வலியுறுத்திய அவர், இதன் மூலம் புவி வெப்பமயமாதல் போன்ற பேரிடரைச் சமாளிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க முடியும் என்றார்.
ஸ்டாலின்: விடுகதையைப் போல் உள்ளது ஆளுநரின் உரை
1 mins read

