பாஜக சொல்வதைத்தான் தேர்தல் ஆணையம் செய்கிறது என்கிறார் தங்க தமிழ்ச்செல்வன்

பாஜக சொல்வதைத்தான் தேர்தல் ஆணையம் செய்கிறது என்கிறார் தங்க தமிழ்ச்செல்வன்

1 mins read
Google News Preferred Icon

தேனி: திருவாரூரில் தற்போதைய கள நிலவரப்படி, அதிமுக தோல்வி அடையும் என்றும் அமமுக வெற்றி பெறும் என்றும் முன்னாள் எம்எல்ஏவும் தினகரன் ஆதர வாளருமான தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார். கம்பத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அமமுக வெற்றி பெறும் என்பதை அறிந்ததாலேயே திருவாரூர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டதாக குறிப்பிட்டார். இனி எப்போதும் தேர்தல் வந்தாலும் அமமுக வெற்றி பெறும் என்று குறிப்பிட்ட அவர், தோல்வி பயம் காரணமாகவே அனைத்துக் கட்சிகளும் தேர்தலை ரத்து செய்ய உதவியதாக குற்றம்சாட்டினார்.

"ஜெயலலிதா அரசு பொங்கல் பரிசாக நூறு ரூபாய்தான் வழங்கியது. ஆனால் எடப்பாடி அரசு ஆயிரம் ரூபாய் வழங்குகிறது. அப்படியானால் ஜெயலலிதாவின் ஆட்சியை மிஞ்சும் அளவுக்கு ஆட்சி நடத்துகிறார்களா?" என்று தங்க தமிழ்ச்செல்வன் கேள்வி எழுப்பினார். தலைமைச் செயலாளரே முன் னுக்குப் பின் முரணாக பேசுவதாக குறிப்பிட்ட அவர், இது தொடர்பில் தேர்தல் ஆணையம் தலைமைச் செயலர் மீது வழக்கு தொடர வேண்டும் என வலியுறுத்தினார். "எனினும் தேர்தல் ஆணையம் அவ்வாறு செய்யாது. ஏனெனில் பாஜகவின் பேச்சை கேட்டுதான் தேர்தல் ஆணையமே செயல்படுகி றது," என்றார் தங்க தமிழ்ச் செல்வன்.