தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் நேற்று தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம் ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க அனுமதி வழங்கி உத்தரவிட்டுள் ளது. முன்னதாக ஆய்வு நடத்திய தேசிய பசுமைத் தீர்ப்பாயம் 25 நிபந்தனைகளுடன் ஸ்டெர்லைட் ஆலை இயங்க அனுமதி வழங் கலாம் எனத் தெரிவித்திருந்தது. ஆனால் தீர்ப்பாயத்தின் அந்தத் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஸ்டெர்லைட் காப்பர் ஆலையைத் திறக்கலாம் என நேற்று உத்தர விட்டது. இதன் மூலம் ஆலையை திறக்க அனுமதிக்கக்கூடாது என்ற தமிழக அரசின் கோரிக் கையை நிராகரிக்கப்பட்டது.
இந்தத் தீர்ப்பின் மூலம் ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை விதித்த தடையும் நிறுத்தி வைக் கப்பட்டுள்ளது. ஆனால், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி நேற்று செய்தியாளர்களிடம் கூறுகையில், "ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கவில்லை. "வழக்கு முடியும் வரை ஆலை மூடப்பட்டிருக்கும். இந்த விவ காரத்தில் தமிழக அரசின் சட்டப் போராட்டம் தொடரும். உடனடி யாக ஆலை திறக்கப்படாது," என்றார்.

