புதுடெல்லி: பொதுத்துறை மற்றும் அரசு நிறுவனங்களைத் தனியார் துறையிடம் ஒப்படைக்க இந்தியா வின் மத்திய அரசாங்கம் மேற் கொள்ளும் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் காங்கிரஸ் மற்றும் இடதுசாரி இயக்கங்களைச் சேர்ந்த தேசிய தொழிற்சங்கங்கள் நேற்றும் இன்றும் நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகின்றன. பணி நிரந்தரம், குறைந்தபட்ச சம்பள விகிதத்தில் உயர்வு, தொழிலாளர்களுக்குச் சமூகப் பாதுகாப்பு உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தியும் போராட்டம் நடத்தப்படுகிறது.
இந்தத் தொழிற்சங்கங்களைச் சேர்ந்த அரசு ஊழியர்கள், வங்கி ஊழியர்கள் மற்றும் தனியார் துறை ஊழியர்கள், ஆட்டோ, பேருந்து மற்றும் வாகன தொழிற் சங்கங்களைச் சேர்ந்தவர்கள் வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்டனர். வேலை நிறுத்தத்தில் பங்கெ டுக்கும் தொழிற்சங்கங்களில் 20 கோடி தொழிலாளர்கள் இருப்ப தாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று காலை தொடங்கிய வேலைநிறுத்தத்தால் கேரளா, கர்நாடகம், மேற்கு வங்காளம், அசாம் மாநிலங்களில் கடும் பாதிப்பு ஏற்பட்டது. திருவனந்தபுரத்தில் தொழிற் சங்கத்தினர் ரயில் மறியலில் ஈடுபட்டனர். பல இடங்களில் பேருந்துச் சேவைகள் முடங்கின. கர்நாடக மாநிலம் ஹூப் ளியில் தொழிலாளர்கள் ஏராளமானோர் போராட்டத்தில் ஈடுபட்ட னர். இதேபோல் அம்மாநிலத்தின் முக்கிய நகரங்களிலும் போராட்டம் நடைபெற்று வருகிறது.

