சென்னையில் உள்ள வண்டலூர் பூங்காவில் நடைபெற்ற இயற்கை உணவுக் கண்காட்சிக்கு ஏராளமானோர் வருகை புரிந்தனர். இயற்கை உணவால் ஏற்படும் நன்மைகள் குறித்து கண்காட்சியில் விவரிக்கப்பட்டது. மேலும் குளிர்காலத்தில் எத்தகைய உணவுகள் உட்கொள்ள வேண்டும், பொதுவாக தவிர்க்கப்பட வேண்டிய உணவுகள் குறித்தும் பொதுமக்களுக்கு துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. இயற்கை உணவு குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் இத்தகைய நிகழ்வுகளை உணவுப்பாதுகாப்புத் துறை தொடர்ந்து நடத்தும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். படம்: தகவல் ஊடகம்
இயற்கை உணவுக் கண்காட்சிக்கு நல்ல வரவேற்பு
1 mins read
-

