சென்னை: தமிழக அரசு ஊழியர் களுக்கு பொங்கல் ஊக்கத் தொகையாக மூவாயிரம் ரூபாய் வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும் அம்மா உணவகத்தில் இனி கட்டடத் தொழிலாளர்களுக்கு விலையில்லா உணவு வழங்கும் திட்டம் விரைவில் தொடங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு, உள்ளாட்சி மன்றப் பணியாளர்கள், அரசின் மானியம் பெறும் கல்வி நிறுவனங் களில் பணியாற்றுபவர்களுக்கு பொங்கல் பண்டிகையை முன் னிட்டு ஊக்கத்தொகை வழங்கப் படுகிறது என அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே சட்டப்பேரவை யில் பேசிய முதல்வர் பழனிசாமி, தொழிலாளர்கள் நலனில் தமிழக அரசு மிகுந்த அக்கறை கொண் டுள்ளதாகக் குறிப்பிட்டார். "சென்னையில் பணிபுரியும் பதிவு செய்த கட்டடத் தொழிலாளர் களுக்கு அம்மா உணவகங்களில் இனி விலையில்லா உணவு வழங்கப்படும். இந்தத் திட்டம் விரைவில் தொடங்கப்படும்.
விலையில்லா உணவு, ஊக்கத் தொகை: முதல்வர் அறிவிப்பு
1 mins read

