தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலையைத் திறப்பதற்கு தடை இல்லை என உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு தூத்துக்குடி மக்களுக்கு ஏமாற்றத்தை அளித் துள்ள நிலையில், ஆலை அமைந் துள்ள பகுதியில் போலிசார் தீவிரமாகக் கண்காணித்து வரு கின்றனர். அதே போல் தூத் துக்குடியின் முக்கிய பகுதிகளி லும் போலிசார் சுற்றுக்காவல் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆலையைச் சுற்றியுள்ள வீர பாண்டியபுரம், குமரெட்டியாபுரம், பண்டாரபுரம் உள்ளிட்ட பகுதி களில் போலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் செய்தியாளர்களி டம் பேசிய தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப்நந்தூரி, ஸ்டெர் லைட் ஆலை விவகாரத்தில் தமிழக அரசு சட்ட ரீதியாக போராடி வருவதாகக் குறிப் பிட்டார். "ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக் கூடாது என்பது அரசின் முடிவு ஆகும். எனவே சட்ட வல்லுனர்களுடன் ஆலோசித்து அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்," என்றார் சந்தீப்நந்தூரி. இதற்கிடையே ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் தொடர்பாக திமுக உறுப்பினர்கள் சட்டப் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். "ஸ்டெர்லைட் ஆலை தொடர் பாக முதல்வர் உரையில் ஏதும் குறிப்பிடாதது குறித்து மு.க. ஸ்டாலின் அதிருப்தி தெரிவித்தார்.
உச்ச நீதிமன்றத் தீர்ப்பு எதிரொலி: தீவிர கண்காணிப்பு வளையத்துக்குள் ஸ்டெர்லைட் ஆலை
1 mins read

