ரூ.100 கோடி வரி மோசடி: சோனியா, ராகுல் உறுதிப் பத்திரம் தாக்கல்செய்ய உத்தரவு

புதுடெல்லி: ரூ.300 கோடிக்கும் அதிகமாக வந்த வருமானத்தை குறைத்துக் காட்டி வரி ஏய்ப்பு மோசடியில் காங்கிரஸ் தலைவர் ராகுலும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி யும் ஈடுபட்டுள்ளதாகக் கூறி வரு மான வரித்துறை அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. வரி ஏய்ப்பு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஒரு வாரத்திற் குள் உறுதிப் பத்திரம் தாக்கல் செய்ய சோனியா, ராகுலுக்கும் வருமான வரித்துறைக்கும் உத்தர விட்டுள்ளது. தொடர்ந்து இவ் வழக்கின் விசாரணையை ஜனவரி 29ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

2011-2012ஆம் நிதியாண்டில் அசோசியேட்டட் ஜேர்னல்ஸ் லிமி டெட் நிறுவனத்தின் மூலம் சோனியா ரூ.155.41 கோடியும் ராகுல் ரூ.154.96 கோடியும் வரு மானம் ஈட்டி உள்ளனர். ஆனால் வருமான வரித்தாக் கல் படிவத்தில் ரூ.68.12 லட்சம் மட்டுமே வருமானம் பெற்றதாக கணக்குக் காட்டி உள்ளதாக வரு மான வரித்துறை கண்டுபிடித் துள்ளது. இவர்களின் சொத்துக் கணக்கை மறுமதிப்பீடு செய்த போது சோனியா குடும்பத்தினர் ரூ.300 கோடிக்கும் அதிகமாக வந்த வருமானத்தை மறைத்து ரூ.100 கோடி அளவிற்கு வரிஏய்ப்பு செய்துள்ளது தெரியவந்தது. இது தொடர்பாக வருமான வரித்துறை அனுப்பிய நோட்டீசை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இதில் சோனியா குடும்பத்திற் காக வாதாடிய முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், அந்த நிறுவனம் ரூ.90 கோடி கடனில் உள்ளதாகவும் வருமான வரித் துறையினர் அதனை மறைத்து ரூ.407 கோடி சொத்து இருப்ப தாகக் கூறுவதாகவும் கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!