காணாமல் போன இதயத்தை தேடித் தரும்படி போலிசில் புகார்

நாக்பூர்: எனது இதயம் திருட்டுப் போய்விட்டது. திருட்டுப்போன இதயத்தைக் கண்டுபிடித்துத் தாருங்கள் என்று போலிசிடம் இளையர் ஒருவர் விசித்திரமாக புகார் அளித்துள்ளார். இந்த சுவையான சம்பவம் மராட் டிய மாநிலம், நாக்பூரில் நடந்துள்ளது. இளைஞரின் புகாரைக் கேட்டு அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்த காவல்துறையினர், உயர் அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு இந்த விவகாரத் துக்கு எப்படி தீர்வு காண் பது என ஆலோசனை கேட்டுள்ளனர். இதையடுத்து, புகார் அளிக்க வந்த இளைஞரி டம், "இந்தப் புகாரை பதிவு செய்வதற்கு இந்திய சட்டத் தில் எந்த உட்பிரிவும் இல்லை எனக் கூறிய காவல்துறையினர், இந்தப் பிரச்சினைக்கு எங்களிடம் தீர்வு இல்லை. திரும்பிச் செல்லுங்கள் என அறிவுரை கூறி அனுப்பி வைத்துள்ள னர்," என்றார்.

கொள்ளையர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட 82 லட்சம் மதிப்புள்ள பொருட்களை உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்வு நேற்று நடைபெற்றபோது செய்தியாளர்களிடம் பேசிய நாக்பூர் காவல் ஆணையர் பூஷன் குமார் உபத்யாய், இந்த சம்பவம் குறித்து கூறினார். திருடப்பட்ட பொருட்களை நாங்கள் கண்டு பிடித்து உரிமையாளர் களிடம் திருப்பி ஒப்படைத்து விடுகிறோம். ஆனால், எங்களால் தீர்வே காண முடியாத சில புகார்களையும் நாங்கள் பெற வேண்டி யுள்ளது என்று நாக்பூர் இளைஞர் பற்றி கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!