புதுடெல்லி: வளர்ந்து வரும் நாடான இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி நடப்பு நிதியாண்டான 2018-19ல் 7.3% ஆக உயர வாய்ப்புள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. அடுத்தடுத்த இரண்டு ஆண்டுகளின் வளர்ச்சியும் படிப்படியாக 7.3%ல் இருந்து 7.5%ஆக உயரும் என்று உலக வங்கி கணித்துள்ளது. இதில் சீனாவின் மொத்த உற்பத்தி மதிப்பு தொடர்ந்து சரிவடையும் என்றும் கூறப்பட்டுள்ளது.
உலக வங்கி: இந்தியாவின் வளர்ச்சி 7.3% ஆக உயரும்
1 mins read

