தமிழகத்தில் கடுங்குளிர்

தமிழகத்தில் கடுங்குளிர்

1 mins read

தமிழகத்தில் வடகிழக்­குப் பருவ மழை விவசாயி­கள் எதிர்­பார்த்துக் காத்திருந்­ததுபோல் அல்லாமல் இந்த முறை 24 விழுக்காடு குறைவாகப் பெய்­துள்ளது. இதைத் தொடர்ந்து பெரும்­பாலான மாவட்டங்களில் கடும் குளிரும் பனிப்பொழிவும் நிலவி வருகிறது. இந்த நிலை பொங்கல் வரை நீடிக்கும் என தமிழ்நாடு வானிலை நிலையம் அறிவித்துள்­ளது. தமிழகத்தில் ஓசூர், கிருஷ்ண­கிரி, திருத்தணி, திருவள்ளூர், விரிஞ்சிபுரம், வேலூர், பையூர், தருமபுரி, அந்தியூர், ஈரோடு, கோவை, பேச்சிப்பாறை, திருமங்­கலம், மதுரை, பவானி, பாண்டிச்­சேரி, சூலூர் ஆகிய பகுதிகளில் வெப்பநிலை 16 டிகிரி செல்சி­யசுக்கும் குறைவாக உள்ளது. குறைந்தபட்சமாக கிருஷ்­ணகிரி, ஓசூரில் 8 டிகிரி செல்­சியஸ் வெப்பநிலை பதிவாகி உள்ள­தாக வானிலை மையம் அறி­வித்துள்ளது. ஊட்டி­யில் 7.4 டிகிரி செல்சி­யஸ் வெப்ப நிலை உள்ளது.

மாலை 4 மணிக்கே குளிர் காற்று வீசத் தொடங்கி மறுநாள் நண்பகல் 12 மணி வரை தொடர்­கிறது. இதனால் பொழுது சாய்ந்­ததுமே மக்கள் வீட்டிற்குள் முடங்­கிக்கிடக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் நேற்று கடுங்­­குளிர் நிலவியது. அது­போல் தமிழகத்தின் வடக்கு மற்றும் மேற்குப் பகுதிகளில் வழக்கத்தைவிடக் குறைவான அளவிலேயே வெப்பநிலை காணப்பட்டது. சென்­னை­யின் பூந்த­மல்லியில் வெப்பநிலை 16.2 டிகிரி செல்­சியஸ் பதிவானது. தமிழகம் மட்டுமல்லாது கேரளா, தெலுங்­கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்­களிலும் வெப்பநிலை­யா­னது ஒற்றை இலக்கத்­தில் உள்­­­ளது.