இந்திக்கு எதிர்ப்பு: கனிமொழி எழுப்பிய கேள்விக்கு வரவேற்பு

இந்திக்கு எதிர்ப்பு: கனிமொழி எழுப்பிய கேள்விக்கு வரவேற்பு

2 mins read
800ea30a-4797-44d3-b890-afc3691623b6
-

புதுடெல்லி: நாடாளுமன்ற மாநிலங் களவையில் துணை சபாநாயகரை நோக்கி, தமக்குப் புரிந்த மொழியில் பேச முடியுமா என்று திமுக உறுப்பினர் கனிமொழி கேள்வி எழுப்பியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் சாதியினருக்குப் பத்து விழுக்காடு இடஒதுக்கீடு அளிக் கும் சட்ட மசோதா மீது நேற்று முன்தினம் மாநிலங்களவையில் விவாதம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய கனி மொழி, புதிய மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். தாம் பெரியார் மண்ணில் இருந்து வந்துள்ளதாகக் குறிப் பிட்ட அவர், திமுகவுக்கு சமூகநீதி தான் முக்கியம் என்றார். சாதியால் புறக்கணிக்கப்பட்ட மக்களை முன்னுக்கு கொண்டு வர இடஒதுக்கீட்டை கொண்டு வந்தது நீதிக்கட்சி ஆட்சிதான் என்று சுட்டிக்காட்டிய அவர், பழைய ஒதுக்கீடும் இப்போது கொண்டு வரப்படும் இடஒதுக் கீடும் எப்போதும் ஒன்றாக இருக் காது என்றார்.

"காலங்காலமாக சாதியால் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உரிய நீதி கிடைக்கும் பொருட்டு கொண்டு வரப்பட்டதே இடஒதுக் கீடு. ஆனால் அதை பறிக்கவே புதிய இடஒதுக்கீடு கொண்டு வரப்படுகிறது," என்று கனிமொழி குற்றம்சாட்டினார். அவர் இவ்வாறு பேசிக் கொண் டிருந்த நிலையில், அவருக்கான நேரம் முடிந்துவிட்டதாக மாநிலங்க ளவை துணை சபாநாயகர் குறுக்கிட்டு இந்தியில் கூறினார். இதையடுத்து அவரை நோக்கிய கனிமொழி, "உங்களால் எனக்குப் புரியக்கூடிய மொழியில் பேச முடியுமா?" என்று கேட்டார். துணை சபாநாயகர் அவரை உட்காருமாறு ஆங்கிலத்தில் கூற, அதன்பிறகு தனது இருக்கையில் அமர்ந்தார் கனிமொழி. இந்திக்கு எதிராக அவர் குரல் கொடுத்ததைப் பல்வேறு மாநிலங் களைச் சேர்ந்த எம்பிக்கள் வர வேற்றனர். அவர்களில் பலர் தங் கள் மேசையை கைகளால் தட்டி ஆதரவைப் புலப்படுத்தினர். படம்: இணையம்