மும்பை: அமெரிக்காவில் இருந்து நாடு திரும்பிய தன்னை இந்தி யில் பேசுமாறு மும்பை விமான நிலைய அதிகாரிகள் வற்புறுத்திய தாக குற்றம்சாட்டியுள்ளார் ஆப்ர ஹாம் சாமுவேல் என்ற பொறியிய லாளர். முனைவர் பட்டம் பெற்றுள்ள இந்த 27 வயது இளையருக்கு தமிழ், ஆங்கிலம் மட்டுமே தெரியும். இந்நிலையில் மும்பை விமான நிலையம் வந்து இறங்கிய தம்மை குடிநுழைவுப் பிரிவு அதிகாரிகள் இந்தியில் பேச வற்புறுத்தியதாகவும் தமக்கு அம்மொழி தெரியாது என்று கூறியபோது, "இந்தி தெரியாமல் ஏன் இந்தியா வந்தீர்கள்?" என அவர்கள் கிண்டல் செய்ததாகவும் அவர் தமது டுவிட்டர் பதிவு ஒன்றில் குறிப் பிட்டுள்ளார்.
இந்தி தெரியாததால் தமிழரை அவமானப்படுத்திய மும்பை விமான நிலைய அதிகாரிகள்
1 mins read

