இட ஒதுக்கீடு; அரசியல் ஆதாயம் கருதி செயல்படும் பாமக: திருமா குற்றச்சாட்டு

இட ஒதுக்கீடு; அரசியல் ஆதாயம் கருதி செயல்படும் பாமக: திருமா குற்றச்சாட்டு

1 mins read

சென்னை: அரசியல் ஆதாயத் துக்காக மட்டுமே பாமக தலைமை சமூக நீதி குறித்து பேசுவதாகச் சாடியுள்ளார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன். இதுதொடர்பாக விடுத்துள்ள அறிக்கை ஒன்றில், பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீடு விவகாரத்தில் பாமக தலைமை தற்போது பாஜகவுக்கு மறைமுக ஆதரவு அளித்திருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் சாதிவாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தி, அனைத்து சமுதாயத் தினருக்கும் மக்கள் தொகைக்கு ஏற்ப இடஒதுக்கீடு வழங்க வேண்டும் எனப் பாமக இளைய ரணித் தலைவர் அன்புமணி வலியுறுத்தி உள்ளார்.

இதற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. "உண்மையிலேயே சமூக நீதியின் மீது அக்கறை இருந்தி ருந்தால் இடஒதுக்கீடு கொள் கையை குழி தோண்டி புதைக்கும் பாஜகவின் மோசடிக்குப் பாமக எதிர்ப்புத் தெரிவித்திருக்க வேண்டாமா? "அதைச் செய்யாமல் மோடி அரசின் மோசடிக்கு மறைமுக ஆதரவு அளித்ததன் வாயிலாக அரசியல் ஆதாயத்துக்காகத் தான் சமூகநீதி பற்றி பாமக பேசுகிறது என்பது அம்பலமாகி உள்ளது," என திருமாவளவன் கூறி உள்ளார். இதற்கிடையே பொருளாதார அடிப்படையிலான இடஒதுக் கீட்டை எதிர்த்து இன்று சென் னையில் விடுதலைச் சிறுத்தை கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் எனவும் திருமா வளவன் அறிவித்துள்ளார்.