நீதிபதிகள் எச்சரிக்கை: ஜல்லிக்கட்டுக்கு ஒற்றுமை தேவை

மதுரை: ஒருமித்த கருத்துடன் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்தாவிடில் தடை விதிக்கப்படும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை எச்சரித்துள்ளது. மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் குறிப்பிட்ட ஒரு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவது குறித்து முடிவெடுப்பதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. வழக்கை விசாரித்தபோதே ஒருமித்த கருத்துடன் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த வேண்டும் என நீதிபதிகள் எச்சரித்தனர்.