சென்னையில் 'பேட்' என்று முடி யும் இடங்களின் பெயர்கள் தமிழில் 'பேட்டை' என்று அழைக்கப்பட்டு வருகின்றன. அவற்றை ஆங்கிலத்திலும் 'பேட்டை' என்று மாற்றுவதற்கு மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது. ரஜினிகாந்த் நடித்த 'பேட்ட' வெளியான அதே நாளில் இந்த முடிவு எடுக்கப்பட் டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்காக சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் சண்முகசுந்தரம் தலைமையில் நடத்தப்பட்ட ஆலோ சனைக் கூட்டத்தில் தமிழ் வளர்ச்சித் துறையினரும் பங்கேற் றனர்.
சென்னை நகரில் உள்ள 18 இடங்களின் பெயர்களை மாற்ற இந்தக் கூட்டத்தில் முடிவு எடுக் கப்பட்டது. குறிப்பாக, சிந்தாதிரி பேட், சைதாபேட், தொண்டியார் பேட், ஜல்லடியாம்பேட் ஆகிய பெயர்களில் வரும் 'பேட்' என்பதை ஆங்கில மொழியிலும் 'பேட்டை' என்றே பயன்படுத்தவும் முடிவு செய்யப்பட்டது. இதற்கான திருத்தத்தை தமிழ் வளர்ச்சித் துறை செய்து அதிகார பூர்வமாக அறிவிக்கும். "பேட்டை என்னும் சொல் தமிழ்நாட்டில் விஜயநகரப் பேரர சுக்குப் பின்னர் உருவானது. 16ஆம் நூற்றாண்டில் உருவான பேட்டை என்னும் வார்த்தை சந்தைப் பகுதி என்பது பொருள். வெவ்வேறு ஆட்சிப் பிரதேசங்களையும் சேர்ந்த சிறு வணிகர்களும் திறன்படைத்த நிபுணர்களும் ஓரிடத்தில் கூடி தொழில் செய்த இடமே பேட்டை என்று அப்போது அழைக்கப்பட்டது," என தொல்லியல் துறையின் முன்னாள் அதிகாரி சி சாந்தலிங்கம் விளக்கி உள்ளார்.
தொண்டைமண்டலத்தில் விரி வான வரலாற்று ஆய்வை நடத்திய பெருமைக்குரியவர் அவர். பின்னர் வந்த ஆங்கிலேயர்கள் தங்களது எளிமையான உச்சரிப் புக்காக பேட்டையை 'பேட்' என்று அழைக்கத் தொடங்கியதோடு அவ் வாறே எழுதவும் செய்தனர். 'பேட்' என்பதை மட்டுமின்றி, அயனாவரத்தை அயன்புரம் என்றும் எக்மோரை எழும்பூர் என்றும் டிரிப்ளிகேனை திருவல்லிக்கேணி என்றும் டி.நகரை தியாகராய நகர் என்றும் மாற்றி பழைய பெயர்களை இருமொழிகளிலும் அகற்றிவிட ஆலோசனைக் கூட்டம் பரிந்துரைத் துள்ளது. தமிழ்மொழி வளர்ச்சித் துறை யின் ஆய்வுப்படி தமிழகத்தின் 32 மாவட்டங்களில் ஆங்கிலத்தில் உள்ள தெருக்கள், ஊர்களின் பெயர்கள் தமிழில் மாற்றப்பட உள் ளன. இதற்கான பணிகள் அந்தந்த மாவட்ட ஆட்சியர்களின் தலை மையில் தீவிரமடைந்து வருகின் றன.

