சபரிமலைக்குப் போன பெண்கள் வீட்டுக்குப் போக முடியவில்லை

திருவனந்தபுரம்: இந்தியாவின் கேரள மாநிலத்தில் உள்ள சபரி மலை ஐயப்பன் கோயிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்று நாட்டின் உச்ச நீதிமன்றம் சென்ற ஆண்டு செப்டம்பரில் உத்தரவு பிறப்பித் ததை அடுத்து அந்தக் கோயிலுக்கு ரகசியமாக சென்று வந்த இரண்டு பெண்களும் கடும் எதிர்ப்பின் காரணமாக தங்கள் வீடுகளுக்குத் திரும்பமுடியாமல் தவிக்கிறார்கள். பிந்து, 40, கனகதுர்கா, 39, என்ற அந்த இரு பெண்களும் ஜனவரி மாதம் 2ஆம் தேதி சபரி மலைக்குச் சென்றனர். இதைத் தொடர்ந்து அவர்கள் கடும் மிரட் டல்களையும் எதிர்ப்புகளையும் எதிர்நோக்கி வருகிறார்கள். இதன் காரணமாக அவர்கள் கொச்சி நகருக்கு வெளியே ரகசிய இடத்தில் தங்கியிருப்பதாக ஊடகத் தகவல்கள் தெரிவித்து உள்ளன. இவ்விருவரும் ஊடகத் திடம் பேசியதாகவும் தங்களுக்குத் தொடர்ந்து எதிர்ப்பு இருந்து வருவதால் போலிசார் தங்களை ரகசிய இடத்தில் தங்கவைத் துள்ளதாகவும் இருவரும் குறிப் பிட்டு இருக்கிறார்கள்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

மும்பையில் நடைபெற்ற ‘மிஸ் இந்தியா’ போட்டியில் ராஜஸ்தானைச் சேர்ந்த சுமன்ராவ் புதிய இந்திய அழகியாகத் தேர்வு பெற்றுள்ளார். படம்: யுடியூப்

17 Jun 2019

இந்திய அழகியாக வாகை சூடினார் ராஜஸ்தானைச் சேர்ந்த 22 வயது சுமன்ராவ்