சிபிஐக்கு சத்தீஸ்கரும் கதவடைப்பு

சிபிஐக்கு சத்தீஸ்கரும் கதவடைப்பு

1 mins read

புதுடெல்லி: வழக்கு விசாரணைத் தொடர்பாக மாநிலத்தில் மத்திய அரசு அலுவலகங்கள் தவிர வேறு இடங்களில் சோதனை அல்லது விசாரணை நடத்தவேண்டுமென்றால் சிபிஐ அதிகாரிகள், மாநில அரசிடம் முன்கூட்டியே தகவல் தெரிவித்து அரசின் ஒப்புதல் பெறவேண்டும் எனவும் இதற்காக சிபிஐக்கு அளித்திருந்த ஒப்புதலை ரத்து செய்தும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அண்மையில் அறிவித்து இருந்தார். இதைத் தொடர்ந்து மேற்கு வங்காள மாநில முதல்வர் மம்தா பானர்ஜியும் சிபிஐ, முன் அனுமதியின்றி சோதனை நடத்த தடை விதித்திருந்தார். இந்நிலையில், சத்தீஸ்கர் மாநில அரசும் இதே நடவடிக்கையை எடுத்துள்ளது.