கும்பமேளாவில் புனித நீராடும் ராகுல்

கும்பமேளாவில் புனித நீராடும் ராகுல்

1 mins read
Google News Preferred Icon

லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலம், அலகாபாத்தில் உள்ள திரிவேணி சங்கமத்தில் வருகிற 14ஆம் தேதி தொடங்கி மார்ச் மாதம் 4ஆம் தேதி வரை கும்பமேளா நடைபெற உள்ளது. இதில் சுமார் 15 கோடி பேர் பங்கேற்று புனித நீராடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கும்பமேளாவில் அன்றாடம் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு நீராட இருப்பதால் பாஜகவும் காங்கிரசும் அவர்களைக் கவர்வதற்காக இப்போதே ஏற்பாடுகளைச் செய்து வருகின்றன. இதற்கிடையே, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் கும்பமேளாவில் கலந்துகொண்டு புனித நீராட உள்ளார். அடுத்த மாதம் (பிப்ரவரி) அவர் கும்பமேளா புனித நீராடலை மேற்கொள்வார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.