பத்திரிகையாளர் கொலை: சாமியார் குற்றவாளி எனத் தீர்ப்பு

ஜோத்பூர்: ராஜஸ்தானில் போதை யுடன் பிரசவம் பாரத்த ஆண் தாதி, பிரசவத்தின்போது குழந் தையை வேகமாக வெளியில் பிடித்து இழுத்ததில் கர்ப் பிணியின் வயிற்றில் இருந்து குழந்தையின் உடல் மட்டும் வெளியில் வந்துவிட்டது. ராஜஸ்தான் மாநிலத்தில் கர்ப்பிணி ஒருவர் அரசு சுகாதார மையத்தில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு ஆண் தாதி பிரசவம் பார்த்தார். குழந்தையை வெளியில் பிடித்து வேகமாக அவர் இழுத்த தாகவும் குழந்தையின் உடல் பகுதி மட்டும் துண்டாக வெளி யில் வந்ததாகவும் தெரிகிறது.

அதிர்ச்சியடைந்த தாதி, உடனே குழந்தையின் உடலை மறைத்துவிட்டு, இன்னும் குழந்தை பிறக்கவில்லை எனவும் சிக்கல் இருப்பதால் வேறு மருத் துவமனைக்குச் செல்லுமாறும் குடும்பத்தினரிடம் கூறினார். இதனைக் கேட்டு கர்ப்பிணியின் கணவர் திரிலோக் சிங் உடனடி யாகத் தன் மனைவியை ஜோத் பூரில் உள்ள அரசு மருத்துவ மனையில் அனுமதித்தார். அங்கு குழந்தையின் தலை மட்டும் உள்ளே இருப்பதை பார்த்த மருத்துவர்கள், பெண் ணின் உறவினர்களுக்குத் தெரி யப்படுத்திவிட்டு அறுவை சிகிச்சை மூலம் தலையை வெளி யில் எடுத்தனர். பிரசவம் பார்த்த தாதி போதை யில் இருந்ததாக முதற் கட்ட விசாரணையில் தெரிய வந்துள் ளது. மறைத்து வைத்திருந்த குழந்தையின் உடல்பகுதியையும் போலிஸ் மீட்டது. இதற்கிடையே, பாதிக்கப்பட்ட பெண், உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவமனை நிர் வாகம் தெரிவித்துள்ளது.