இந்தி திரை நட்சத்திரங்களுடன் மோடி

பிரதமரின் அழைப்பை ஏற்று டெல்லி சென்ற இந்தி திரைப்பட நட்சத்திரங்களான ரன்வீர் சிங், அலியா பட், ரன்பீர் கபூர், கரண் ஜோஹர் உள்ளிட்ட நடிகர், நடிகைகள் மோடியுடன் ஒன்றாக இணைந்து வியாழக்கிழமை செல்ஃபி படம் எடுத்துக்கொண்டனர். திரைப்படங்கள் நாட்டின் வளர்ச்சிக்கு ஆற்றி வரும் பங்கு, கலாசாரத்தில் ஏற்படுத்தும் தாக்கம் பற்றி இவர்கள் கலந்துரையாடியதாகக் கூறப்படுகிறது. படம்: இந்திய ஊடகம்