புதுடெல்லி வாக்காளர்கள் பட்டியலில் 30 லட்சம் பேர் நீக்கம் என புகார்

புதுடெல்லி: புதுடெல்லியில் 2015ஆம் ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தலுக்குப் பிறகு வாக்காளர் பட்டியலில் சுமார் 30 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாகவும் இதில் பாஜகவின் பங்கு உள்ளதாகவும் ஆளும் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் ராகவ் சத்தா செய்தியாளர் களிடம் தெரிவித்தார். இதுதொடர்பான பட்டியலையும் அவர் வெளியிட்டார். 2015 சட்டப்பேரவைத் தேர்தலில் அடைந்த படுதோல்விக்குப் பழிதீர்க்கும் விதமாக இதுபோன்ற செயல்களில் பாஜக ஈடுபட்டுள்ளது என்றார் அவர்.