கல்வித் தொலைக்காட்சி துவக்கம்

சென்னை: பள்ளிக்கல்வித்துறை சார்பில் புதிதாக தொடங்கப்பட உள்ள கல்வித் தொலைக்காட்சியில் 24 மணிநேரமும் நிகழ்ச்சி இடம்பெறும் என அத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கல்வித் தொலைக்காட்சி ஒளிபரப்பு வரும் 21ஆம் தேதி முதல் தொடங்கும் எனவும் அவர்கள் கூறினர். முதற்கட்டமாக இத்தொலைக்காட்சிக்கு என பதினைந்துக்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகள் தயாரிக்கப்பட்டுள்ளன. கல்வித்துறையின் செயல்பாடுகள், மானியங்கள், நலத்திட்ட உதவிகள், புதிய பாடத்திட்டங்கள் குறித்து விளக்கும் நிகழ்ச்சிகள், கல்வித்துறையில் சிறப்பாகத் திறன்களை வெளிப்படுத்தி வரும் ஆசிரியர்களைப் பற்றிய நிகழ்ச்சிகள் தயார் செய்யப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.