லஞ்சம் பெற்ற ஆய்வாளர்: மாறு வேடத்தில் உறுதி செய்த போலிசார்

ஈரோடு: சத்தியமங்கலம் பகுதியில் வாகனச் சோதனை என்ற பெயரில் போலிசார் லஞ்சம் வாங்குவதாக லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலிசாருக்கு புகார் வந்தது. இதையடுத்து போலிசார் இருவர், லாரி ஓட்டுநர், உதவியாளர் வேடத்தில் பன்னாரி பகுதி நோக்கி லாரியில் சென்றனர். அப்போது குறிப்பட்ட பகுதியில் லாரியை தடுத்து நிறுத்திய போக்குவரத்து ஆய்வாளர் பதி என்பவர், அந்த லாரியைத் தடுத்து நிறுத்தி லஞ்சம் கேட்டுள்ளார். மாறுவேடத்தில் வந்த போலிசார், ரசாயனம் தடவப்பட்ட ரூபாய் நோட்டுகளை அளிக்க, அதை பதி பெற்றுக்கொண்டபோது தாங்கள் லஞ்ச ஒழிப்பு போலிசார் என்பதை தெரிவித்தனர். இதையடுத்து விசாரணைக்காக தனது சொந்த வாகனத்தில் காவல் நிலையம் வருவதாகக் கூறிய ஆய்வாளர் பதி, போலி சாரை ஏமாற்றி தப்பிவிட்டார். அவருக்கு வலைவீசப்பட்டுள்ளது.