மெரினா: 2,000 கடைகளை அகற்ற மாநகராட்சி நடவடிக்கை

சென்னை: மெரினா கடற்கரையில் உள்ள கடைகளின் எண்ணிக்கை குறைக்கப்பட உள்ளது. இதையடுத்து தற்போது அக்கடற்கரைப் பகுதியில் இயங்கி வரும் இரண்டாயிரம் கடைகளை அப்புறப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை சென்னை மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது. தற்போதுள்ள கடைகளை அகற்றிவிட்டு, புதிய உரிமத்துடன் குறைவான கடைகளை மட்டும் அனுமதிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதையடுத்து அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.