உள்ளாடைகளில் மறைத்து ரூ.8 கோடி தங்கம் கடத்திய இரு பெண்கள் கைது

1 mins read
0f7e3f1d-cefd-4fd8-b095-868cbe8d1499
-

சென்னை: சென்னை விமான நிலையத்தில் உள்ளாடைகளில் மறைத்து தங்கம் கடத்திவந்த இரு தென்கொரிய பெண்களை சுங்கத் துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். ஹாங்காங்கில் இருந்து சென் னைக்கு நேற்று இரவு 1.30 மணிக்கு கேத்தே பசிபிக் நிறு வன விமானம் ஒன்று வந்தது. அந்த விமானத்திலிருந்து இறங்கிய சுமார் 200 பயணிகளை நுண்ணறிவு பிரிவினரும் சுங்கத் துறையினரும் கண்காணித்தனர். அப்போது ஒரே மாதிரி உடை யணிந்து வந்த இரண்டு தென் கொரிய பெண்கள் மீது அதிகாரி களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. உடனே அவர்களது உடை மைகளை அதிகாரிகள் சோதனை செய்தனர். ஆனால் அவர்களின் கைப்பெட்டிகளில் எந்தப் பொருட் களும் இல்லை. இதையடுத்து அவர்களுடைய கடவுச்சீட்டை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது இரண்டு பெண் களும் சுற்றுலா விசாவில் ஹாங் காங்கிலிருந்து சென்னைக்கு வந்து இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து இருவரும் வெளியே செல்ல அனுமதிக்கப் பட்டனர். ஆனால் அவர்கள் மீதான சந்தேகம் அதிகாரிகளுக் குத் தணியவில்லை. இதனால் அவர்களை அழைத்து விமான நிலையத்தில் உள்ள தனி அறை யில் பெண் அதிகாரிகள் சோதனை யிட்டனர்.