சென்னை: சென்னையில் ஏற் கெனவே பனிமூட்டம் நிலவு கிறது. இந்த நிலையில் நாளை போகிப் பண்டிகையை மக்கள் கொண்டாடுவதால் விமான நிலைய அதிகாரிகள் முன்னேற் பாட்டு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். கடந்த ஆண்டு போகிப் பண்டிகையின்போது காலையில் இயக்கப்படும் 16 விமானங்கள் வேறு விமான நிலையங்களுக்குத் திருப்பி விடப்பட்டன. 42 விமானங்கள் தாமதமாகப் புறப்பட்டன. மேலும் 40க்கும் மேற்பட்ட விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. இந்நிலையில் இவ்வாண்டு காலையில் இயக்கப்படும் விமானங்களின் நேரத்தை ஒரு சில நாட்களுக்கு மாற்றியமைக் கும் திட்டம் குறித்து அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.
போகி; விமான நிலையத்தில் முன்னேற்பாடு தீவிரம்
1 mins read

