சென்னை: விராலிமலை ஜல்லிக் கட்டுப் போட்டியில் 2,000 காளை களை பங்கேற்கச் செய்து உலக சாதனை படைக்க தீவிர முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து உலக சாதனை மதிப்பீட்டாளர்கள் விராலிமலைக்கு வரவுள்ளனர். பொங்கல் பண்டிகையை முன் னிட்டுத் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுப் போட்டி ஆண்டுதோறும் நடத்தப் பட்டு வருகிறது. அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலைப் பட்ட மரத்தம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு வரும் 20ஆம் தேதி ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெறு கிறது. இதற்கு தமிழக அரசின் அனுமதி கிடைத்துள்ளது. கடந்தாண்டு விராலிமலை ஜல்லிக்கட்டுப் போட்டியில் 805 காளைகள் மட்டுமே பங்கு பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் விராலிமலை ஜல்லிக்கட்டுப் போட்டியில் 2000 காளைகள் பங்குபெறும் நிலையில் அதனை நேரில் பார்வையிட்டு மதிப்பிடுவதற்காக உலக சாதனை அமைப்பினர் விராலிமலை வரவுள் ளனர். இதற்கிடையே வாடிவாசல் அமைக்கும் பணி, தடுப்பு வேலிகள் அமைக்கும் பணி, பார்வையாளர்கள் மாடம் அமைக்கும் பணிகள் தீவிர மாக நடைபெற்று வருகின்றன.
ஜல்லிக்கட்டு; உலக சாதனைக்கு ஆயத்தம்
1 mins read
-

