'கோடநாடு விவகாரத்தில் எனக்குத் தொடர்பில்லை'

'கோடநாடு விவகாரத்தில் எனக்குத் தொடர்பில்லை'

1 mins read

சென்னை: சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத் தில் எம்ஜிஆர் பிறந்தநாள் ஏற் பாடுகள், நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து அவைத் தலைவர் மதுசூதனன் தலை மையில் ஆலோசனை நடை பெற் றது. இதில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உட்பட அமைச்சர்களும் நிர்வாகிகளும் கலந்துகொண்டனர். பின்னர் பேசிய முதல்வர் பழனிசாமி, "கோடநாடு கொள்ளை குறித்த காணொளி ஆவணம் குறித்து புகார் அளிக்கப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கோடநாடு கொள்ளை தொடர்பாக வெளி யான காணொளிவில் சொல்லப் பட்ட தகவல்களில் உண்மை யில்லை," என்றார். "மறைந்த முதல்வர் ஜெயல லிதா மேல் களங்கம் கற்பிக்கும் வகையில் இந்த காணொளி வெளியிடப்பட்டுள்ளது," என்றும் அவர் சொன்னார்.